விழுப்புரத்தில் ஆட்சியரிடம் 527 மனுக்கள் குவிந்தன

83பார்த்தது
விழுப்புரத்தில் ஆட்சியரிடம் 527 மனுக்கள் குவிந்தன
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பழனி தலைமையில், பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கலெக்டர், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று, மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு, தொடர்புடைய அலுவலர்கள், மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் 527 மனுக்கள் பெறப்பட்டது. குறிப்பாக, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல துறை சார்ந்த மனுக்கள் பெறப்பட்டது. டி. ஆர். ஓ. , பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, சப் கலெக்டர் முகுந்தன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி