விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் மனித ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகளில் அறிவுசார் சொத்துரிமைகள் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்த ரங்கில் சிதம்பரம் (ஆர். எம். எம். சி. எச்)
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை உதவி பேராசிரியர் டாக்டர் வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், சிறந்த அடையாளம், திட்டமிடல், வணிகமயமாக் கல், ஊட்டச்சத்து துறையில் கண்டுபிடிப்புகள் அல்லது படைப்பாற்றல் மற்றும் வர்த்தக ரகசியங்கள், உணவு, ஊட்டச்சத்து துறையில் நிறுவனங்கள் மற்றும் சமையல், மூலப்பொருள் விகிதங்கள் குறித்து விளக்கினார். மேலும் "மனித ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை துறையில் அறிவுசார் சொத்துரிமைகள் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அறிவுறுத்தினார். இக்கருத்தரங்கில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு கலந்துரையாடி பயனடைந்தனர். முடிவில் 2-ம் ஆண்டு மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை துறை மாணவி அஜிமா நன்றி கூறினார்.