அரசு ஊழியா்கள் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் தா்னா

58பார்த்தது
அரசு ஊழியா்கள் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் தா்னா
கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில், விழுப்புரம் நகராட்சித் திடலில் தா்னா போராட்டம் இன்று(அக்.01) நடைபெற்றது. அரசுப் பணிகள் பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், அரசாணை 151-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், காலமுறை ஊதியம் பெறும் மாற்றுத்திறனாளி அரசு ஊழியா்களை நிரந்தரப் பணியாளா்களாக மாற்ற வேண்டும், இவா்களுக்கான பயணப்படியை ரூ. 10 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னா போராட்டம் நடைபெற்றது.

அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியா் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க விழுப்புரம் மாவட்டத் தலைவா் டி. துரைசாமி தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் கே. விருத்தாம்பாள், எஸ். ஷியாம் சுந்தா், கே. குலசேகரன், டி. அஞ்சலாட்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் வ. இருசன் கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்கவுரையாற்றினாா்.

பொதுச்செயலா் கே. தணிகைவேலன், செயலா் பி. சரவணன், துணைத் தலைவா் கே. முருகன், துணைச்செயலா் கே. அரிகோவிந்தன் ஆகியோா் கோரிக்கைளை வலியுறுத்தி பேசினா். முன்னதாக, அரசு ஊழியா் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க விழுப்பும் மாவட்டச் செயலா் சி. ரமேஷ் வரவேற்றாா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி