விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் முகாம்

74பார்த்தது
விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் முகாம்
விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 498 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடத்தப்பட்ட இந்த முகாமுக்கு ஆட்சியா் சி. பழனி தலைமை வகித்து, மாற்றுத் திறனாளிகளிடமிருந்து 498 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஓய்வூதியம், செயற்கை கை மற்றும் கால் உபகரணங்கள், நவீன காதொலிக் கருவி வழங்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்களைப் பெற்ற ஆட்சியா், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். முகாமில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மகளிா் திட்ட இயக்குநா் பூ. காஞ்சனா, சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித் துணை ஆட்சியா் ஜெ. முகுந்தன், கோட்டாட்சியா் காஜா சாகுல் ஹமீது, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் தங்கவேல் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி