திருநங்கைகளுக்கான குறை தீர்ப்பு கூட்டம் அறிவிப்பு

61பார்த்தது
திருநங்கைகளுக்கான குறை தீர்ப்பு கூட்டம் அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 18. 07. 2024 அன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள குறைதீர்ப்பு கூட்ட அரங்கில் அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு குறைதீர்ப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இச்சிறப்பு முகாமில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு, திருநங்கைகள் நல வாரியத்தின் அடையாள அட்டை பெறுதற்கு பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் ஆயஷ்மான் பாரத் அட்டை ஆகியவைகள் வழங்க நடடிவக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பழைய திருநங்கை நல வாரிய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் இணையதள அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தங்களின் விவரத்தை https: //tg. tnsw. in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட சமூக நல அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி