வளவனூர் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
By Krishnan 81பார்த்ததுவிழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே பூவரசன்குப்பத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சதீஷ். இவரது மனைவி சிவசக்தி (32). இவா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தாா். அப்போது, சுமாா் 40 வயது மதிக்கத்தக்க முகமூடி அணிந்த நபா், சிவசக்தி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.