பெண் குழந்தைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

53பார்த்தது
பெண் குழந்தைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழுப்புரம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் சார்பில், விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா தலைமை வகித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏ. டி. எஸ். பி. , ஸ்ரீதரன் பங்கேற்று, பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 600 மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில், பெண் குழந்தைகள், மாணவிகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்கள், அதற்கான காரணங்கள், அதனை தடுப்பதற்கான வழி முறைகள், சட்ட உதவிகள் குறித்து விளக்கினர்.

மேலும், பெண்களுக்கான அவசர உதவி அழைப்பு எண்கள் 1930, 14567, 14417, 181 மற்றும் குழந்தைகள் உதவி எண் 1098, போக்சோ சட்டம், குழந்தை திருமணச் சட்டம் பற்றிய விழிப்புணர்வும் மற்றும் காவலன் உதவி செயலி பதிவிறக்கம் செய்து, அதன் பயன்பாடுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி