பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்

80பார்த்தது
பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்
விழுப்புரத்தில் இந்தாண்டுக்கான பிரம்மாண்ட விநாயகர் சிலைகள், வண்ணமயமாக உற்பத்தி செய்து விற்பனைக்கு தயாராகியுள்ளது. கடந்தாண்டைக் காட்டிலும் விற்பனை குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். தமிழகத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டும் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, பொது இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கான ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் உற்பத்தி செய்வதோடு, பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டு கைவினைஞர் கிராமம் என அழைக்கப்படுகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர் குடும்பத்தினர், பிரம்மாண்ட விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் ஆண்டு முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தாண்டும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, வண்ணம் பூசி, தற்போது விற்பனைக்கும் வண்ணமயமாக தயார்படுத்தி வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி