மாஜி அமைச்சர் சண்முகம் காட்டம்

73பார்த்தது
மாஜி அமைச்சர் சண்முகம் காட்டம்
புதுச்சேரி சாராயம் குடித்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேம்பி மதுரா பூரி குடிசை கிராமத்தை சேர்ந்த பிரகாஷ், 38; வேலு, 40: ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் சண்முகம் கூறியதாவது:

தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சியல்ல. கள்ளச்சாராய ஆட்சி. மக்களுக்கு ரேஷன் கடையில் அத்தியாவாசிய பொருட்கள் கிடைக்கிறதோ இல்லையோ நாட்டில் மூலை முடுக்குகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று முன்தினம் விக்கிரவாண்டி அடுத்த பூரி குடிசையில் புதுச்சேரி கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. அவர்களது உறவினர்களை கூட பார்க்க அனுமதிக்கவில்லை.

மக்களை பற்றி கவலைப்படாமல், இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்தியுள்ளனர். சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதை காட்டிலும் டி. ஜி. பி. , க்கு என்ன வேலை இருக்கிறது. உதயநிதிக்கு சேவை செய்வதுதான் டி. ஜி. பி. , வேலையா? ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளுக்கு டி. ஜி. பி. , துணை போகிறார். தமிழகத்தில் நடக்கின்ற பல விஷயங்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை. தமிழகத்தில் நடைபெறும் கள்ளச்சாராய சாவுகளுக்கு தமிழக முதல்வரே முழு பொறுப்பேற்க வேண்டும். அவர்தான் குற்றவாளி. இவ்வாறு அவர் கூறினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி