குழந்தை பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற கால அவகாம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
பிறப்பு சான்றிதழ் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான பிறப்பு சான்றிதழ் ஆகும்.
குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், விசா உரிமம் மற்றும் வெளிநாட்டில் குடியுரிமை பெற பிறப்பு சான்றிதழ் முக்கிய ஆவணமாக உள்ளது.
குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்தால் அந்த குழந்தை பிறந்த நாளில் இருந்த 12 மாதங்களுக்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து மூலம் உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் வழங்கி எவ்வித கட்டணமின்றி பெயரை பதியலாம்.
ஓராண்டிற்கு பின் 15 ஆண்டிற்குள் ரூ. 200 தாமத கட்டணம் செலுத்தி பதியலாம்.