விழுப்புரம் அடுத்த தொரவியை சேர்ந்தவர் வீரப்பன் மனைவி ராஜகுமாரி, 62; இவர் நேற்று முன்தினம் இரவு சிந்தாமணி தனியார் பள்ளி அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது, திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.