அரசு நுாலகங்களுக்கு புத்தகங்கள் நன்கொடை

64பார்த்தது
அரசு நுாலகங்களுக்கு புத்தகங்கள் நன்கொடை
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நுாலகங்களுக்கு, புத்தகங்களை நன்கொடையாக வழங்கினர்.

விழுப்புரம் மாவட்ட மைய நுாலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட நுாலக அலுவலர் காசிம் தலைமை தாங்கினார். நுாலகர் இளஞ்செழியன் வரவேற்றார். எழுத்தாளர் செங்குட்டுவன் நோக்க உரையாற்றினார்.

நிகழ்ச்சியில், 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 290 புத்தகங்கள், விழுப்புரம் வேலா சிறப்புப் பள்ளி நிர்வாகம் சார்பில், அரசு நுாலகங்களுக்கு நன்கொடையாக வழங்கினர்.

வேலா சிறப்புப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் லதா மோகன், புத்தகங்களை வழங்கினார்.

சிறப்பு பள்ளி நிர்வாகிகள் பாலகுமாரன், பிரேம்ஆனந்த், திவ்யா, மாறவர்மன் பங்கேற்றனர். மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் வெங்கடேசன், வாசகர் வட்ட தலைவர் சொக்கநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

நுாலகர் வேல்முருகன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி