மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் சிறப்பு நிதி வழங்காத பா. ஜ. , அரசை கண்டித்து தி. மு. க. , சார்பில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தெற்கு மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். மாநில மருத்துவரணி தலைவர் கனிமொழி சோமு கண்டன உரையாற்றினார்.
ரவிக்குமார் எம். பி. , அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், எம். எல். ஏ. , க்கள் சிவா, லட்சுமணன், பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், துணை செயலாளர் முருகன், முன்னாள் எம். எல். ஏ. , க்கள் மாசிலாமணி, செந்தமிழ்செல்வன், சீத்தாபதி சொக்கலிங்கம், நகர செயலாளர்கள் சக்கரை, கண்ணன், ஜீவா, ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, பழனி, கவுன்சிலர் ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.