மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

79பார்த்தது
மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில், மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டக்குழு உறுப்பினர் பச்சையப்பன் தலைமை தாங்கினார்.

மாவட்டக்குழு உறுப்பினர் லூயிபாஸ்டர் முன்னிலை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் ராஜா, மாநிலக்குழு உறுப்பினர் செல்வக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தி. மு. க. , அரசின் மின் கட்டண உயர்வு மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் மற்றும் அத்தியாவசிய பொருட்கள், கடந்த ஆட்சிக்காலங்களில் தடையின்றி கிடைத்ததுபோல், மாதம் தவறாமல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். நிர்வாகிகள் சிவக்குமார், ஜெகநாதன், செல்லவேல், மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி