அரகண்டநல்லூர் போலீஸ்பிடியில் இருந்து குற்றவாளி தப்பி ஓட்டம்

0பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேலக்கோண்டூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன்(26) என்பவர் மது போதையில் அவ்வழியாக சென்ற நபர் ஒருவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார்.



இது குறித்து அளித்த புகாரின் பேரில் இன்று காலை பிரவீனை காவல் நிலையம் அழைத்து வந்த போலிசார் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க முற்பட்டு உள்ளனர். இதற்காக உடல் தகுதி சான்று பெறுவதற்கு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவ பரிசோதனையின் போது அங்கிருந்து பிரவீன்(26) தப்பி ஓடி உள்ளார். குற்ற வழக்கில் கைது செய்த குற்றவாளி போலீசாரின் பிடியிலிருந்து தப்பி ஓடிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி