விழுப்புரம் அரசு கல்லூரியில் நாளை கலந்தாய்வு

54பார்த்தது
விழுப்புரம் அரசு கல்லூரியில் நாளை கலந்தாய்வு
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லுாரியில் பி. ஏ. , - பி. எஸ்சி. , - பி. காம். , உட்பட 13 இளங்கலை, அறிவியல் பிரிவு படிப்புகளுக்கு 1, 990 சேர்க்கை இடங்கள் உள்ளன. இதற்கு, 19, 167 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

முதற்கட்டமாக சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவுகளை சேர்ந்த விளையாட்டு பிரிவு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய முன்னுரிமை பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 29ம் தேதி, விழுப்புரம் அரசு மகளிர் பள்ளி தற்காலிக மையத்தில் நடந்தது. இதனையடுத்து, நாளை தொடங்கி 15ம் தேதி வரை பொது பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு, விழுப்புரம் அரசு கல்லுாரி மையத்தில் நடக்கிறது.

நாளை பி. ஏ. தமிழ், 11ம் தேதி பி. ஏ. , ஆங்கிலம், 12, 13ம் தேதி பி. எஸ்சி. , கணிதம், புள்ளியல், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி பயன்பாட்டியல், 14ம் தேதி பி. காம். , வணிகவியல், 15ம் தேதி பி. ஏ. , வரலாறு, பொருளியில் பாடத்துக்கான கவுன்சிலிங் நடைபெறும். கவுன்சிலிங்கில் மாணவர்களுக்கு மெசேஜ் அனுப்பி வைக்கப்படும். மேலும் விபரங்களுக்கு கல்லுாரி aagacvpm. edu. in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். கலந்தாய்வு காலை 9: 00 மணிக்கு தொடங்கும். மாணவர்கள் முன்னதாகவே வர வேண்டும். பதிவிறக்கம் செய்த விண்ணப்பம், கல்வி சான்றிதழ்கள், 3 போட்டோ, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, சேர்க்கை கட்டணத்துடன் வர வேண்டும் என கல்லுாரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி