கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சேர்க்கை அவகாசம் நீட்டிப்பு

66பார்த்தது
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சேர்க்கை அவகாசம் நீட்டிப்பு
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பெரியசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் இந்த ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி மாணவர் சேர்க்கை நடக்கிறது. இப்பயிற்சியில் சேர கடந்த 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனை தற்போது வரும் 31ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் www. tncu. tn. gov. in என்ற இணையதளத்தில் ரூ. 100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, கல்லுாரி படிப்பு தேர்ச்சி பெற்றோர் இந்த பயிற்சியில் சேரலாம்.

ஓராண்டு கால பயிற்சி இரு பருவங்களாக நடக்கிறது. ஆன்லைனின் சமர்பித்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதோடு அசல் மற்றும் நகல் கல்வி சான்றை இணைத்து மேலாண்மை நிலையத்தில் நேரில் சமர்பிக்க வேண்டும்.

பயிற்சி கட்டணம் ரூ. 18, 750 செலுத்த வேண்டும். இது தொடர்பான மேலும் விபரங்கள் பெற விரும்புவோர், எண். 2/1006, எல்லீஸ் சத்திரம் சாலை, வழுதரெட்டி, விழுப்புரம் 605401 என்ற முகவரியில் இயங்கும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலோ அல்லது 04146- 259467, மொபைல் 94425 63330 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி