விழுப்புரத்தில் சிறுமியை கடத்தியதாக, வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கோடைவிடுமுறையில் டைப்ரைட்டிங் பயிற்சிக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் டைப்ரைட்டிங் பயிற்சிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது பெற்றோர், விழுப்புரம் மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதில் இந்திரா நகரைச் சேர்ந்த 25 வயது வாலிபர் சிறுமியை கடத்திச் சென்றுவிட்டதாக கூறப்பட்டிருந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.