தேவாலயங்களில் நிதி உதவி கூறி விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் தகவல்

83பார்த்தது
தேவாலயங்களில் நிதி உதவி கூறி விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் தகவல்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகள் செய்வதற்கு அரசு மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன்படி, கூடுதல் பணிகளாக சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட் மற்றும் ஒலிபெருக்கி, நற்கருணை பேழை பீடம், திருப்பலிக்கு தேவையான கதிர் பாத்திரங்கள், சுருபங்கள், மெழுகுவர்த்தி ஸ்டாண்ட், பக்தர்கள் அமர்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் ஆகிய உபகரணங்கள், தேவாலயத்திற்கு சுற்றுச்சுவர் வசதி அமைத்தலுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தேவாலயம் 10 முதல் 15 ஆண்டுகள் வரையிருந்தால்ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக மானிய தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல், 15 முதல் 20 ஆண்டுகள் வரையிருந்தால் ரூ. 4 லட்சத்தில் இருந்து ரூ. 15 லட்சமாகவும், 20 ஆண்டுகளுக்கு மேலிருந்தால் ரூ. 6 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது நிதியுதவி கோரி விண்ணப்பிக்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. கட்டட வரைபடம், திட்ட மதிப்பீட்டோடு தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளோடு சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதியுதவி வேண்டி பரிந்துரை செய்யப்படுகிறது. நிதியுதவி 2தவணைகளாக கலெக்டர் ஒப்புதலோடு தேவாலயம் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி