விழுப்புரத்தில் பாதாள சாக்காடை அடைப்பால் பொதுமக்கள் அவதி

62பார்த்தது
விழுப்புரத்தில் பாதாள சாக்காடை அடைப்பால் பொதுமக்கள் அவதி
விழுப்புரம் நகராட்சி 25வது வார்டுக்கு உட்பட்டு ஜெயலட்சுமி நகர் உள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த நகரில் உள்ள 3க்கும் மேற்பட்ட பாதாள சாக்கடையில் கடந்த சில தினங்களுக்கு முன் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் மேன்ஹோல் வழியாக வெளியேறி குடியிருப்பு சாலைகளில் வழிந்தோடுகிறது. இதன் மூலம் வெளியேறும் கழிவுநீரால், அங்குள்ள பொதுமக்கள் துர்நாற்றத்தில் சிக்கி தவிக்கின்றனர். இது மட்டுமின்றி, கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளில் அதிகமாக வெளியேறி தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இது பற்றி, அங்குள்ள பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் அங்குள்ள பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அடைப்பு ஏற்பட்டுள்ள பாதாள சாக்கடைகளை சீரமைக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி