விழுப்புரத்தில் புரட்சி பாரதம் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் தமிழரசன் தலைமையில், அம்பேத்கரை விமர்சித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, அக்கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, தமிழரசன் உள்ளிட்ட 34 பேர் மீது, விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதே போல், தடையை மீறி ரயில் மறியலில் ஈடுபட்ட வி. சி. க. , மாவட்ட செயலர் பெரியார் தலைமையிலான 93 பேர் மீதும், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.