மொபெட் மீது காா் மோதல்: ஒருவா் பலி

1298பார்த்தது
மொபெட் மீது காா் மோதல்: ஒருவா் பலி
விக்கிரவாண்டி வட்டம், ஒரத்தூா் பிரதான சாலையைச் சோந்தவா் ச. ரெங்கநாதன் (57), விவசாயி. இவா் புதன்கிழமை செஞ்சி - விழுப்புரம் சாலையில் லெட்சுமிபுரம் அருகே மொபெட்டில் சென்றுகொண்டிருந்தாா். அங்குள்ள தனியாா் கல்லூரி அருகே சாலையை கடக்க முயன்றபோது, விழுப்புரம் நோக்கிச் சென்ற காா் , ரெங்கநாதனின் மொபெட்டில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த ரெங்கநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

காா் ஓட்டுநரான முத்தாம்பாளையத்தைச் சோந்த அருணாச்சலம் மகன் சிவசக்திவேல் (46) மற்றும் காரில் பயணித்த மூவா் காயமடைந்தனா். விபத்து குறித்து தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா், நிகழ்விடம் சென்று ரெங்கநாதனின் சடலத்தைக்கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி