விழுப்புரம் அருகே திருப்பச்சாவடிமேட்டில் உள்ள ஸ்ரீ வித்யோதயா கல்வியியல் கல்லுாரியில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது. ஸ்ரீ வித்யோதயா கல்வியியல் கல்லுாரி, ஜி. ஏ. , எஜூகேஷ்னல் மற்றும் சாரிடபுள் டிரஸ்ட் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், மரக்கன்று நடும் விழாவை ஊராட்சி தலைவர் தனசேகரன் துவக்கி வைத்தார். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சம்பந்தமான மனித சங்கிலி ஊர்வலத்தை முன்னாள் துணை வேந்தர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மண்வளம் பாதுகாப்பு, மரம் நடுவதன் முக்கியத்துவம் பற்றி முதுநிலை ஆசிரியர்கள் சரவணன், கணேசன் ஆகியோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்வியியல் கல்லுாரி மாணவ, மாணவிகள் பலர் சுற்றுச்சூழலை காப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். பேராசிரியர்கள் ராஜீ, கலைமுகம், ஜானகிராமன், பாஸ்கரன், வீரபத்திரன், பழனியம்மாள், சூர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜி. ஏ. கல்வி அறக்கட்டளை தலைவர் தியாகராஜன் நன்றி கூறினார்.