ஆடி பட்டம் இலவச விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்

65பார்த்தது
ஆடி பட்டம் இலவச விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்
விழுப்புரத்தில் தோட்டக்கலை துறை சார்பில் ஆடி பட்டம் இலவச விதை வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் ஆடிபட்டத்துக்கான விதைகள் வழங்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில், தோட்டக்கலைத்துறை சார்பில், இந்தாண்டு ஆடி மாதம் தொடக்கத்தில் அரசு சார்பில் இலவச காய்கறி விதைகள் வழங்கும் பணி தொடங்கியது. கலெக்டர் பழனி, விவசாயிகளுக்கு காய்கறி விதை தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தார்.

டி. ஆர். ஓ. , பரமேஸ்வரி, வேளாண் இணை இயக்குநர் சீனுவாசன், தோட்டக்கலை துணை இயக்குநர் அன்பழகன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி