விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகரில் அமைந்துள்ள வீரவாழி மாரியம்மன் கோயில் ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரம் ஆராதனை நடைபெற்றது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக சுவாமிக்கு பால், தயிர், அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.