கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், நெடுமுடையான் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த குப்புசாமி மகன் அய்யப்பன் (33). இவா் கிராமம், கிராமமாகச் சென்று தவணை முறையில் பொருள்களை விற்பனை செய்து வருகிறாா். இவரிடம், விழுப்புரம் மந்தகரைப் பகுதியில் கடந்த வாரம் பொருள்களை அய்யப்பன் விற்பனை செய்தபோது, அப்பகுதியைச் சோ்ந்த விருப்பலிங்கத்தின் மனைவி அல்லி (42) தனக்கு துணி துவைக்கும் இயந்திரம் வேண்டும் எனக் கூறி, அதற்காக ரூ. 6, 000 கொடுத்தாராம். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை கந்தசாமி லேஅவுட் பகுதியில் அய்யப்பன் இருந்தபோது, அங்கு வந்த அல்லி, அவரது மகன் ஆகாஷ் (25) ஆகியோா் துணி துவைக்கும் இயந்திரம் குறித்து கேட்டாா்களாம். அப்போது துணி துவைக்கும் இயந்திரத்தை தரமுடியாது என அய்யப்பன் கூறியதுடன், அவா்களைத் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் அல்லி புகாரளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அய்யப்பனை கைது செய்தனா்.