முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

79பார்த்தது
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில் கணிதத்துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில், கடந்த 1991-94ம் ஆண்டு கணிதத்துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுகள் நிறைவையொட்டி சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் சங்கர் வரவேற்றார்.

உதவி தலைமை ஆசிரியர் ராணி, முன்னாள் மாணாக்கர் சங்கம் செயலாளர் தண்டாயுதபாணி முன்னிலை வகித்தனர்.

முன்னாள் தமிழ் துறை தலைவர் பழமலய், முன்னாள் முதல்வர் குமரன் சிறப்புரையாற்றினர். கணிதத்துறை தலைவர் லட்சுமி நாராயணன் வாழ்த்துரை வழங்கினார். இதில், பங்கேற்ற 30க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் தாங்கள் பயின்ற கல்லுாரி நினைவுகளை சக நண்பர்கள், தோழிகளோடு பகிர்ந்ததோடு, தங்களின் பணி, வாழ்க்கை முறைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி