தென்பசியார்கிராமத்தில் ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் நடந்தது.
மயிலம் அடுத்ததென்பசியார்கிராமத்தில் பாலமுருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு கடந்த ஜூலை 26ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. அன்று இரவு 8: 00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
ஆடி கிருத்திகையையொட்டி நேற்று காலை 6: 00 மணிக்கு சுவாமிக்குஅபிஷேகம்நடந்தது. 9: 00 மணிக்கு பெண்கள் பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்குஅபிஷேகம்செய்தனர். 10: 00 மணிக்கு பக்தர்களின் மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்தனர்.
விரதம் இருந்த பக்தர்களுக்குமிளகாய்பொடிஅபிஷேகம், செடல் சுற்றுதல் நடந்தது. பிற்பகல் 1: 00 மணிக்கு தீ மிதித்தல், காவடி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10: 00 மணிக்கு வாண வேடிக்கை நடந்தது.