விழுப்புரம் அருகே இளைஞா் அடித்துக் கொலை

81பார்த்தது
விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை அருகே ரத்தக் காயங்களுடன் இளைஞா் இறந்து கிடப்பதாக விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா், சாலையோரம் கிடந்த இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவா், தேனி மாவட்டம், கோம்பையைச் சோ்ந்த ரங்கசாமி மகன் அரவிந்த் (23) என்பதும், அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டு சாலையோரத்தில் வீசப்பட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். முன்விரோதத் தகராறில் இந்த கொலை நடந்திருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி