அ. தி. மு. க. , உறுப்பினர் அட்டை வழங்கும் பணியை, முன்னாள் அமைச்சர் துவக்கி வைத்தார்.
அ. தி. மு. க. , வில் ஏற்கனவே வழங்கப்பட்ட உறுப்பினர் அட்டையில், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் படம் இடம் பெற்றிருந்தது. அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் புதியதாக உறுப்பினர் சேர்க்கை நடந்தது. புதிய உறுப்பினர் அட்டையில் பொதுச்செயலாளர் பழனிச்சாமி படம் இடம் பெற்றுள்ள நிலையில், அந்த உறுப்பினர் அட்டை மாநிலம் முழுவதும், கட்சி தலைமைகழகத்தின் சார்பில், மாவட்ட செயலாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய உறுப்பினர் அட்டைகளை , ஒவ்வொரு ஒன்றியம், நகரங்களிலுள்ள பொறுப்பாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சியை, விழுப்புரம் மாவட்ட அ. தி. மு. க. , செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகம் திண்டிவனத்தில் துவக்கி வைத்தார்.
புதிய உறுப்பினர் அட்டையை மாஜி அமைச்சர் வல்லம் ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தியிடம் வழங்கினார். இதில் வானுார் எம். எல். ஏ. , சக்கரபாணி, மாநில ஜெ. , பேரவை துணை செயலாளர் பாலசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் புலியனுார் விஜயன், ராமதாஸ், ரவிவர்மன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.