விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் கூட்ரோடு பகுதியில், இன்று (ஜூலை 28) விழுப்புரம் தெற்கு மாவட்ட, கோலியனூர் கிழக்கு, மேற்கு, தெற்கு ஒன்றிய செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வில் விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன், விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.