இரும்பு கடையில் திடீர் தீ விபத்து

80பார்த்தது
இரும்பு கடையில் திடீர் தீ விபத்து
விழுப்புரத்தில் இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏராளமான பொருள்கள் எரிந்து சேதமடைந்தது.

விழுப்புரத்தில், சென்னை நெடுஞ்சாலையில், காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகே தனியார் இரும்பு கடை உள்ளது. அங்கு, கட்டுமானத்துக்கான இரும்பு கம்பிகள், இரும்பு கூரைக்கான ஷீட்டுகள், பெயிண்ட்டுகள் விற்கின்றனர். குடோனுடன் கூடிய அந்த கடையில், நேற்று இரவு 10: 00 அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு துறையினர், உதவி மாவட்ட அலுவலர் சிவசங்கரன் தலைமையில் விரைந்து சென்று, ஒரு மணி நேரம் போராடி கட்டுப்படுத்தினர். எனினும், கடையின் உள்ளே இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி, உருகி சேதமடைந்தன.

பெரும் புகை மூட்டம் எழுந்ததால், தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. விழுப்புரம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி