விழுப்புரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட கட்டட ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நகராட்சி கமிஷனர் ரமேஷ் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக கட்டடங்களில் முன்பகுதியில் தற்காலிக கொட்டகை அமைத்தும், தரைப்பகுதி, சாலைப்பகுதி பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு செய்துள்ளோர் 7 நாட்களுக்குள் தாங்களே அகற்றிக் கொள்ள, தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சிகளின் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறினால், நகராட்சி பணியாளர்கள் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றி, இருமடங்கு செலவின தொகையை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.