விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ளது மணம்பூண்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த கண்ணுசாமி என்பவரது வீட்டின் சுவர் பகுதியில் ஓட்டினார் போல் கற்களுக்கு இடையில் 5 அடி நீளம் கொண்ட நல்லப்பாம்பு ஒன்று இருப்பதாக வீட்டின் உரிமையாளர் திருக்கோவிலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அடுத்து,
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், கற்களுக்கு இடையில் புகுந்திருந்த சுமார் 5 அடி நீளமுள்ள நல்லப்பாம்பை அரை மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டு அருகில் உள்ள டி. அதிப்பாகம் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.