விழுப்புரம் எஸ்.பி., அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விழுப்புரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட சாலாமேடு, என்.ஜி.ஓ. நகர், பாண்டியன் நகர், தந்தை பெரியார் நகர் பகுதிகளில் கடந்த 5 மாதங்களில் இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 14 வழக்குகளில் 10 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் 75 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிவுப் பணிகளில் 8 பேர் கைது செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், தங்கள் வீட்டைப் பூட்டி வெளியூர் செல்லும்போது போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவிக்க வேண்டும். சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்த வேண்டும். சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.