விக்கிரவாண்டி வட்டம், எசாலம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் மகள் நிஷா (22), திருமணமாகாதவர். சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த நிஷா செவ்வாய்க்கிழமை வீட்டிலிருந்தபோது கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாராம். இதை அருணாச்சலம் கண்டித்ததால், ஆத்திரமடைந்த நிஷா வீட்டில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் பெரியதச்சூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.