விழுப்புரம் வட்டம், அரியலூா் திருக்கை, அண்ணா நகரைச் சோ்ந்தவா் பழனி (51), தொழிலாளி. இவா், கடந்த 8- ஆம் தேதி அதே கிராமத்தைச் சோ்ந்த முருகன் கொடுத்த விஷம் கலந்த மதுவைக் குடித்துவிட்டாராம். இதைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிந்த பழனி அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் கெடாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இறந்தவருக்கு மனைவி, 2 மகள், ஒரு மகன் உள்ளனா்.