விழுப்புரம் மாவட்டம் களத்துமேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (27)வாகனத்தில் எடுத்துச் சென்று பாத்திரம் விற்பனை செய்து வருகின்றார் இவர் உறவினர் வீட்டு விழாவிற்கு சென்று உள்ளார் பின்பு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார் இதனை அவரது பெற்றோர் தட்டி கேட்டதால் விரக்தி அடைந்த ஆனந்தன் கருங்காலிப்பட்டு அழகு நாச்சியம்மன் கோவில் பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கானை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.