விழுப்புரம் அடுத்த காகுப்பத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 41; இவருக்கும், அவரது மனைவி சத்யா, 30; என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் குடும்ப பிரச்னையால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கோபித்துக்கொண்டு, தனது மகள் ஜகதல பிரதாப தேவி, 1; என்பவருடன் சத்யா வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.