விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ரூ. 1. 18 லட்சம் பறிமுதல்

67பார்த்தது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ரூ. 1. 18 லட்சம் பறிமுதல்
விக்கிரவாண்டி தொகுதி பறக்கும் படை அலுவலர் சரவணன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் துணை ராணுவ படையினர் செஞ்சி -நந்திவாடி சாலையில் கன்னந்தல் கிராமத்தில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த இன்னோவா காரை சோதனை செய்த போது அதில் கணக்கில் வராத ரூ. 1. 18 லட்சம் இருந்தது தெரியவந்து, அவற்றை பறிமுதல் செய்து, தொகுதி தேர்தல் அலுவலர் சந்திரசேகரிடம் ஒப்படைத்தனர். விக்கிரவாண்டி தொகுதியில் நேற்று 9 ம்தேதி வரை கணக்கில் வராத பணம் ரூபாய் ஒரு கோடியே 12 லட்சத்து 34 ஆயிரத்து 900 மும் , ரூபாய் 21லட்சத்தி 34 ஆயிரத்தி 200 மதிப்புள்ள பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி