விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வெப் கேமரா மூலம் ஆட்சியர் ஆய்வு

78பார்த்தது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வெப் கேமரா மூலம் ஆட்சியர் ஆய்வு
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடந்தது. மொத்தமுள்ள் 23 மண்டலங்களில், 276 ஓட்டுச்சாவடிகளில் காலை 7: 00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. மாலை 6. 00 மணி வரை நடந்தது. இதற்காக, 552 பேலட் யூனிட்கள், 276 கன்ட்ரோல் யூனிட்கள், 276 வி. வி. பாட் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் 1, 355 பேர் பணியில் ஈடுபட்டனர். 3 எஸ். பி. , க்கள் தலைமையில், 2, 600 போலீசார் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டனர். மொத்தமுள்ள 276 ஓட்டுச்சாவடி மையங்களிலும், இந்த முறை வெப்கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டது. மேலும், 44 வாக்குச்சாடிகள் பதற்றமானவையாக கருதி, அங்கு 44 நுண் பார்வையாளர்களும், பாதுகாப்பு பணிக்காக, தலா 2 பேர் வீதம், துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படையினர் ஈடுபட்டனர். மேலும், மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் என கண்டறியப்பட்ட 110 இடங்களில் சி. சி. டி. வி. , பொருத்தப்பட்டது. இந்த வெப் கேமராக்கள், சி. சி. டி. வி. , கேமரா பதிவுகள், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பழனி, விக்கிரவாண்டி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களிலிருந்து, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி