தி. மு. க பொறியாளர் அணி சார்பில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

81பார்த்தது
தி. மு. க பொறியாளர் அணி சார்பில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி. மு. க. பொறியாளர் அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு இடையேயான பேச்சுப்போட்டி விக்கிரவாண்டி சூர்யா கல்லூரி அரங் கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம். எல். ஏ. தலைமை தாங்கினார். பொறியாளர் அணி துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணை அமைப்பாளர்கள் ஸ்டாலின். செந்தில்குமார், ஆனந்தகுமார், பிரசாந்த் ரீகன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செல்வகுமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு பேச்சுப் போட்டியை தொடங்கி நிர்வாகிகள் வைத்தார். பின்னர் அவர் போட் டியில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினார், மேலும் நிகழ்ச்சியில் இறுதியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் துறை சர்ந்த அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்

தொடர்புடைய செய்தி