விழுப்புரம்: குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை

1பார்த்தது
விழுப்புரம்: குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை
விழுப்புரத்திலிருந்து கீழ்ப்பெரும்பாக்கம், அரசு கலைக் கல்லூரி, அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அதிகளவில் ரயில்வே தார்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சாலையின் முகப்பிலேயே தார்சாலை உடைந்து பெரும் பள்ளமாக உள்ளதால், அந்த வழியாக வந்து திரும்பும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. 

அதேபோல் அங்குள்ள கிழக்கு பாண்டி சாலை பிரதான சாலையின் மையத்தில் உள்ள பழைய இரும்புக் கட்டையும் விபத்தை ஏற்படுத்தும் விதமாக ஆபத்தான நிலையில் தொடர்கிறது. இதனால், அந்த பகுதியில் காலை, மாலை வேளையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதனால், அங்கு சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி