விக்கிரவாண்டி அடுத்த கயத்துாரில் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. தோட்டக்கலைத் துறை சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு, ஊராட்சி தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் ஜெய்சன் முன்னிலை வகித்தார். தட்டக்கலை அலுவலர் அனுசுயா வரவேற்றார். விவசாயிகள் தங்களது நிலங்களில் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது மேலும், தங்களது தேவைக்கு விவசாயிகள் ஆதார் அட்டை, சிட்டா, வரைபடம், சிறு குறு விவசாயிகள் சான்றிதழ், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் பாப்பனப்பட்டு அலுவலகத்தில் கொடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. கயத்துார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர். உதவி தோட்டக்கலை அலுவலர் சூர்யா நன்றி கூறினார்.