விழுப்புரம் தெற்கு மாவட்ட தி. மு. க. , சார்பில் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடந்தது. விக்கிரவாண்டி
சூர்யா கல்லுாரி அரங்கில் தெற்கு மாவட்ட தி. மு. க. , பொறியாளர் அணி சார்பில் நடந்த பொறியியல் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு புகழேந்தி எம். எல். ஏ. , தலைமை தாங்கினார். பொறியாளர் அணி துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணை அமைப்பாளர்கள்
ஸ்டாலின், செந்தில்குமார், ஆனந்தகுமார், பிரசாந்த் ரீகன் ராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செல்வகுமார் வரவேற்றார். துணைப் பொதுச் செயலாளர் அமைச்சர் பொன்முடி பேச்சுப் போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். லட்சுமணன் எம். எல். ஏ. , மாநில பொறியாளர் அணி தலைவர் சரவணன், கல்லுாரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி, மாவட்ட துணைச் செயலாளர்கள் இளந்திரையன், முருகன், பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணைச் சேர்மன் பாலாஜி. ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, ஜெயபால், நகர செயலாளர்கள் நைனா முகமது, சர்க்கரை, நியமனக் குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, மைதிலி, நடுவர்கள் சஞ்சீவிராயன், குமாரகிருஷ்ணன், கலைச்செல்வன் உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். பொறியாளர் அணி மாவட்ட தலைவர் சுரேஷ் நன்றி கூறினார்.