தமிழக சீர்மரபினர் நல வாரியம், சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை போன்ற திட்டங்களில் உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் ஆட்சியர் பழனி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.