விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிநவீன மின்னணு திரை விழிப்புணர்வு வாகனம் இயக்க
நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பழனி கலந்துகொண்டு விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீசு வழங்கினார்.