விக்கிரவாண்டியில் பாமக வேட்பாளரிடம் போலீசார் வாக்குவாதம்

69பார்த்தது
விக்கிரவாண்டியில் பாமக வேட்பாளரிடம் போலீசார் வாக்குவாதம்
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுபதிவு நேற்று நடைபெற்றது. பா. ம. க. , வேட்பாளர் அன்புமணி கக்கனுார் ஓட்டுச்சாவடி எண் 55 ஐ பார்வையிட தனது கட்சியினருடன் சென்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் சேகர் என்பவர் வேட்பாளர் அன்புமணியை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி ஒருமையில் பேசிய தாக கூறப்படுகிறது. இதில் அதிர்ச்சியடைந்த வேட்பாளர் அன்புமணி , சம்பந்தப்பட்ட போலீஸ்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடன் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த மற்ற போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அதே போன்று தொரவி கிராமத்தில் சாலையோரமாக பா. ம. க. , நிர்வாகிகள் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் பா. ம. க. , வக்கீல் பாலு உள்ளிட்ட கட்சியினரை கலைந்துபோக சொன்னதால் போலீசாருக்கும் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ஏ. டி. எஸ். பி. , திருமால், வக்கீல் பாலுவை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி