மதுரப்பாக்கத்தில் மனுக்கள் பெறும் முகாம்

76பார்த்தது
மதுரப்பாக்கத்தில் மனுக்கள் பெறும் முகாம்
விக்கிரவாண்டி தாலுகாவில் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறும் முகாம் நடந்தது.

மதுரப்பாக்கத்தில் நடந்த முகாமிற்கு மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் தமிழரசன் தலைமையில் ஆதிதிராவிட நல அலுவலர் வளர்மதி, தாசில்தார் யுவராஜ் முன்னிலையில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றனர்.

வட்ட வழங்கல் அலுவலர் பிரசாத், ஊராட்சி தலைவர் கஜேந்திரன், வி. ஏ. ஓ. , கேசவன், ஊராட்சி செயலாளர் பாலு, உதவியாளர் சதீஷ், அரவிந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி