விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பகண்டைபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி சுகந்தி, 35. இவர் நேற்று முன்தினம் காலை 8. 00 மணிக்கு ஸ்கூட்டி வாகனத்தில் செய்யாத்து வின்னான் ஏரிக்கரை அருகே சென்றார்.
அப்போது, திடீரென குறுக்கே புகுந்த காட்டுப்பன்றி மீது ஸ்கூட்டி மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுகந்திக்கு தலையில் பலத்த அடிபட்டது.
அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார்.